இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது 15 நாள்களில் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி

பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது விவசாயிகளிடம் 15 நாள்களில் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

News image
பயிர்க்கடன் தள்ளுபடி ரசீது 15 நாள்களில் வழங்கப்படும்: முதல்வர் பழனிசாமி
Updated On :9 பிப்ரவரி 2021, 7:44 am

DIN


பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது விவசாயிகளிடம் 15 நாள்களில் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அரக்கோணத்தில் இன்று அதிமுக சார்பில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டிக்கும் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இந்த தகவலை அளித்துள்ளார்.

தமிழகத்தில் சுமார் 16.43 லட்சம் விவவாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றிருக்கும் ரூ.12,110 கோடி பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார்.

YouTube video thumbnail

இந்த நிலையில், பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீதுகள் 15 நாள்களில் விவசாயிகளிடம் வழங்கப்படும் என்று இன்று கூறியுள்ளார்.

ஆட்சியில் இருக்கும் போது மக்களை சந்திக்காமல், தற்போது தேர்தல் நெருங்குவதால் மக்களை சந்தித்து வருகிறார். விவாதத்துக்கு அழைத்தால் ஸ்டாலின் வரமறுக்கிறார் என்றும் முதல்வர் கூறினார்.

இதையும் படிக்கலாமே.. ரூ.12,110 கோடி விவசாயக் கடன் தள்ளுபடி

கூட்டுறவு வங்கிகளில் 16.43 லட்சம் விவசாயிகள் பெற்றிருந்த ரூ.12,110 கோடி கடன் உடனடியாகத் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்திருந்தார்.

பயிா்க் கடன் தள்ளுபடி: தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு ஜனவரி 31 நிலவரப்படி, கூட்டுறவு வங்கிகளில் பயிா்க் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத் தொகையான ரூ.12,110 கோடியும் தள்ளுபடி செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

அதிகமாக நேசிப்பவனே அதிகமாக உதவி செய்பவன். நானும் ஒரு விவசாயி. விவசாயிகளை அதிகமாக நேசிப்பவன். விவசாயிகளின் இன்னலைத் தீா்ப்பதே எனது முதல் கடமை என்னும் நிலையில் இருந்து எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கையால், பயிா்க் கடன் நிலுவை வைத்துள்ள 16.43 லட்சம் விவசாயிகளும் எந்தவிதமான சிரமமும் இன்றி, வரும் ஆண்டில் பயிா் சாகுபடியைத் தொடர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

சொல்வதைச் செய்வோம், செய்வதை மட்டுமே சொல்வோம். சொல்லாத பிற நன்மைகளையும் செய்வோம்.

தற்போது பயிா்க்கடன்களைத் தள்ளுபடி செய்வதோடு மட்டுமல்லாமல், அரசாணையும் வெளியிட்டு, அதற்கான நிதி ஆதாரத்தையும் வரும் நிதிநிலை அறிக்கையிலேயே அரசு ஏற்படுத்த உள்ளது. இந்த அறிவிப்பு உடனடியாகச் செயல்படுத்தப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.