அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மயிலத்தில் குடிநீர் பிரச்னை தீர்க்க வலியுறுத்தி திமுக ஆர்ப்பாட்டம்

மயிலம் பேருந்து நிறுத்தத்தில் திமுக சார்பில் குடிநீர் பிரச்னை, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

News image
குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி மயிலத்தில் திமுக ஆர்ப்பாட்டம்
Updated On :10 பிப்ரவரி 2021, 9:33 am

DIN

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மயிலம் பேருந்து நிறுத்தத்தில் திமுக சார்பில் குடிநீர் பிரச்னை, தெருவிளக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திக் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
 
ஆர்ப்பாட்டத்திற்கு மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஆர்.மாசிலாமணி தலைமை தாங்கினார். மயிலம் திமுக ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.சேதுநாதன் முன்னிலை வகித்தார்.

திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் சீதாபதி சொக்கலிங்கம், மாநில மருத்துவர் அணி டாக்டர் சேகர், அவைத் தலைவர் கோவிந்தராஜ், மாவட்ட துணைச்செயலாளர் மலர்மன்னன், மாவட்ட பொருளாளர் ரவி, மாவட்ட சிறுபான்மை பிரிவு கே.எஸ்.அன்சாரி உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். 

தி.மு.க மாவட்டச் செயலாளரும், செஞ்சி சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ்.மஸ்தான் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மயிலம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். ஆர்.மாசிலாமணி ஆர்ப்பாட்டத்தில் பேசும் போது திடீரென்று மின்தடை ஏற்பட்டது.

இதனைக் கண்டித்து தி.மு.க., வினர் புதுச்சேரி - மயிலம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை ஈடுபட்டதாலும், மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டதாலும் போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.