/

மங்கனூர்  செபஸ்தியார் ஆலய திருதேர் திருவிழா

கந்தர்வகோட்டை அடுத்த மங்கனூர் பகுதியிலுள்ள மிக புகழ்பெற்ற செபஸ்தியார் திருத்தலத்தில் திருத்தேர் திருவிழா செவ்வாய்கிழமை இரவு நடைபெற்றது. 

News image
Updated On :27 ஜனவரி 2024, 7:29 pm

DIN

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அடுத்த மங்கனூர் பகுதியிலுள்ள மிக புகழ்பெற்ற செபஸ்தியார் திருத்தலத்தில் திருத்தேர் திருவிழா செவ்வாய்கிழமை இரவு நடைபெற்றது. 

Story image

ஆண்டுதோறும் தை மாத செவ்வாய்க்கிழமையில் அறுவடைக்கு பின் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம் , நிகழாண்டு திருவிழாவை முன்னிட்டு ஆலயத்தில் மின்னொளி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு , திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. 

தொடர்ந்து கோவில் வளாகத்திலிருந்து அலங்கரிக்கப்பட்ட திருத்தேர் ஊர்வலம் அந்தோணியார் கோவில் தெரு உள்ளிட்ட ஊரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலம் வந்தது.

Story image

இதில், நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர். இறுதியாக பக்தர்கள், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.