இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

கீரனூரில் கார் விபத்து: சென்னையைச் சேர்ந்த தந்தை, குழந்தை பலி; 6 பேர் காயம்

சென்னையிலிருந்து காரைக்குடி நோக்கி வந்த கார் சனிக்கிழமை காலை விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த தந்தை மற்றும் அவரது 2 வயது குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

News image
சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான கார்.
Updated On :13 பிப்ரவரி 2021, 4:18 am

DIN

புதுக்கோட்டை: சென்னையிலிருந்து காரைக்குடி நோக்கி வந்த கார் சனிக்கிழமை காலை விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த தந்தை மற்றும் அவரது 2 வயது குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த ராமன் தனது உறவினர்களுடன் காரில் காரைக்குடி நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

கார் சனிக்கிழமை காலை 6 மணியளவில் கார் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் பொக்கன்குளம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இடது ஓரத்தில் இருந்த சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ராமன் (35), அவரது மகன் ரட்சன் (2) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும் காரில் வந்த பாலையா (68), சிவகாமி (22), லட்சுமி (50), தர்வேஸ் (5), ஜெயந்தி (25), நந்தினி (30) ஆகியோர் காயமடைந்தனர்.

கார் ஓட்டுநர் ப. சிலம்பரசன் (34) காயமின்றி உயிர்தப்பினார்.

காயமடைந்தோர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து கீரனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.