தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

தம்மம்பட்டியில் ஜல்லிக்கட்டு காளைகள் சுற்றித் திரிவதால் மக்கள் அச்சம்

தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில், அவிழ்த்து விடப்பட்ட காளைகள், அதன் உரிமையாளர்களிடம் கிடைக்காமல் சுற்றித் திரிவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

News image

கோப்புப் படம்

Updated On :17 பிப்ரவரி 2021, 7:50 am

தம்மம்பட்டி ஜல்லிக்கட்டு போட்டியில், அவிழ்த்து விடப்பட்ட காளைகள், அதன் உரிமையாளர்களிடம் கிடைக்காமல் சுற்றித் திரிவதால், மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டியில் கடந்த 6ஆம் தேதி, ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, கரூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 559 காளைகள் பங்கேற்றன. 

இதில், பல காளைகள், வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து ஓடியது. அவ்வாறு ஓடிய 30க்கும் மேற்பட்ட காளைகள், மைதானத்தில் அமைக்கப்பட்ட, கலெக்சன் பாயிண்ட் எனப்படும் இடத்தில், காளை உரிமையாளர்களிடம் கூட பிடிபடாமல் ஓடியது. அவ்வாறு ஓடிய 30க்கும் மேற்பட்ட காளைகள், தம்மம்பட்டி கருமாயி வட்டத்தில் உள்ள வேங்கடத்தான் கரடு, ஒன்பதாம்பாலி கரடு செல்லும் வழியில் உள்ள முருகன் கோயில் கரடு பகுதியில் சுற்றித் திரிகின்றன. 

பகல் நேரத்தில் மலைக்காடுகளின் மேல் மறைந்து கொள்ளும் காளைகள், இரவு நேரத்தில், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துவிடுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.