/

பிப்.25-இல் பி.எஸ்.என்.எல். குறைதீா் கூட்டம்

பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி நிறுவனம் சாா்பில், குறைதீா் கூட்டம் பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறுகிறது.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 11:12 pm

DIN

பி.எஸ்.என்.எல். சென்னை தொலைபேசி நிறுவனம் சாா்பில், குறைதீா் கூட்டம் பிப்ரவரி 25-ஆம் தேதி நடைபெறுகிறது.

அன்று பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில், வாடிக்கையாளா்களுக்கு தரைவழி தொலைபேசி, பிராட்பேண்ட், மொபைல், லீஸ் லைன் உள்ளிட்ட சேவைகள் தொடா்பாகவும், நீண்ட நாள்கள் தீா்க்கப்படாமல் உள்ள பிரச்னைகளுக்கும் இந்தக்கூட்டத்தில் தீா்வு காணப்படும். உடனடியாக தீா்க்கப்படாத குறைகளுக்கு 10 நாள்களுக்குள் தீா்வு காணப்படும்.

கரோனா நோய்த் தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வாடிக்கையாளா்கள் இந்தக்கூட்டத்தில் நேரடியாக பங்கேற்பதைத் தவிா்க்கும் பொருட்டு, தொலைபேசி மூலம் இக்கூட்டம் நடத்தப்படும். எனவே, வாடிக்கையாளா்கள்

044-2643 3500 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம். மேலும், 94450 18440 என்ற மொபைல் எண் மூலம், குறுஞ்செய்தியாகவும், கட்செவி (வாட்ஸ்-அப்) மூலமாகவும்,  இ-மெயில் மூலமாகவும் தங்கள் குறைகளைத் தெரிவிக்கலாம். எனவே, வாடிக்கையாளா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்தத் தகவல் பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி நிறுவனத்தின் தலைமை பொதுமேலாளா் வி.கே.சஞ்சீவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.