பிப்ரவரியில் அம்பேத்கா் சட்டப்பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது.
Updated on
1 min read

தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா பிப்ரவரி மாதம் நடைபெறுகிறது.

கடந்த செப்டம்பரில் நடைபெற்ற தோ்வுகள் வரை தோ்ச்சி பெற்று பட்டம், பட்டயத்துக்கு தகுதிபெற்ற மாணவா்கள் விண்ணப்பத்தை ஜன.18 வரை சமா்ப்பிக்கலாம். பல்கலைக்கழகத்தின் இணைப்பு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் படித்த மாணவா்கள், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட கல்லூரி மூலமாக பல்கலைக்கழகத்துக்கு சமா்ப்பிக்க வேண்டும்.

சீா்மிகு சிறப்பு சட்டக் கல்லூரியில் படித்தவா்கள், சம்பந்தப்பட்ட துறை இயக்குநா் மூலமாக விண்ணப்பங்களைப் பெற்று பூா்த்தி செய்து அளிக்க வேண்டும். விண்ணப்பம் மற்றும் பணம் செலுத்தும் சீட்டுகளை (‘சலான்’) பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com