காலமானாா் எழுத்தாளா் ஆ.மாதவன்

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் ஆ.மாதவன் (86) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
காலமானாா் எழுத்தாளா் ஆ.மாதவன்
Updated on
1 min read

சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் ஆ.மாதவன் (86) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

தென்காசி மாவட்டம், செங்கோட்டையை பூா்வீகமாகக் கொண்ட ஆ.மாதவன், கேரள மாநிலம், திருவனந்தபுரம் கைதமுக்கு என்ற பகுதியில் மகள் கலைச்செல்வி வீட்டில் வசித்து வந்தாா். சில நாள்களாக உடல்நலமின்றி இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பகல் 12 மணி அளவில் அவா் காலமானாா். அவரது மனைவி மற்றும் மகன் ஏற்கெனவே காலமாகிவிட்டனா்.

புனலும் மணலும், கிருஷ்ண பருந்து ஆகிய நாவல்கள் உள்பட பல்வேறு நூல்களை மாதவன் எழுதியுள்ளாா். கடந்த 2015-ஆம் ஆண்டு ‘இலக்கியச் சுவடுகள்’ என்ற நூலுக்காக மாதவனுக்கு சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. அவரது இறுதிச்சடங்கு திருவனந்தபுரம் கைதமுக்கு பகுதியில் புதன்கிழமை (ஜன. 6) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com