மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

கிராமமே கொண்டாடும் மார்கழிப் பொங்கல் 

பொங்கல் என்றதுமே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது தைப் பொங்கலும் சூரிய வழிபாடும்தான். ஆனால், மார்கழியிலும் பொங்கலிடப்படுகிறது ஒரு கிராமத்தில்.

News image

நிகழாண்டு மார்கழிப் பொங்கல் விழாவில் பங்கேற்றோர்

Updated On :14 ஜனவரி 2021, 12:09 pm IST

பொங்கல் என்றதுமே நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது தைப் பொங்கலும் சூரிய வழிபாடும்தான். ஆனால் ஆலங்குளம் அருகேயுள்ள கிராமம் ஒன்றில் தை மாதம் 1-ஆம் தேதி பொங்கலை விட மார்கழி மாதம் 3-ஆவது செவ்வாய்க்கிழமை இரவு கிராம மக்கள் ஒன்று கூடி வீதிகள் தோறும் பொங்கலிட்டு அம்மனுக்குப் படைத்து வழிபட்டு வருகின்றனர். ஏன் மார்கழிப் பொங்கலுக்கு சிறப்பு?

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் வட்டம் குருவன்கோட்டை கிராமத்தில் தான் இந்த மார்கழிப் பொங்கல் ஆண்டு தோறும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளுக்காக கிராம மக்களில் பெரும்பாலானோர் குறிப்பாக பெண்கள், ஒரு வாரத்திற்கு முன்பாகவே விரதம் இருப்பர். குறிப்பிட்ட நாளன்று இளைஞர்கள், இளம்பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து கிராமத்தில் உள்ள அனைத்துத் தெருக்களையும் அலங்கரித்து தெருக்கள் சந்திக்கும் இடங்களில் பந்தலிட்டு பந்தலில் மஞ்சள், கரும்பு தோரணங்கள் கட்டுவர்.

ஒவ்வொரு தெரு சந்திப்பிலும் அந்த தெருவில் வசிக்கும் அனைவரும் ஒன்று கூடி பொங்கலிட்டு அதே இடத்தில் அம்மனை வழிபடுவர். கிராமத்தில் சுமார் 30 இடங்களில் இந்த பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடைபெறும். பொங்கலிடுதலுக்குப் பின்னர் கிடா வெட்டி படைத்து விருந்தினர்களை அழைத்து விருந்து படைக்கும் நிகழ்ச்சியும் உண்டு. இதனை இம்மக்கள் முக்கு பொங்கல் எனவும் மார்கழிப் பொங்கல் எனவும் அழைக்கின்றனர். இந்த மார்கழிப் பொங்கல் 100 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கிராமத்தில் நடைபெற்று வருகிறது. 

நிகழாண்டு மார்கழிப் பொங்கல் விழாவில் பங்கேற்றோர்

நிகழாண்டு மார்கழிப் பொங்கல் விழாவில் பங்கேற்றோர்

இதற்காக முதல் ஆண்டே வீடுகள் தோறும் மஞ்சள், வேப்பிலை கலந்த தண்ணீர் சிறிய கலையம்(மண்ணால் செய்யப்பட்ட சிறிய பானை) கட்டி வீட்டு வாசலில் தொங்க விடப்படும். அது மறு ஆண்டு பொங்கலுக்கு எடுத்து பயன் படுத்தப்படும்.

 சுமார் 170 ஆண்டுகளுக்கு முன் கொடிய காலரா நோய் இப்பகுதியில் பரவியதாகவும் அதனால் நூற்றுக் கணக்கான கிராம மக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனராம். வீடுகளில் இருப்போர், வயல் வெளியில் வேலைக்குச் சென்றோர் என பலரது உயிர் பிரிந்துள்ளது. அப்போது பூசாரி ஒருவர் வடக்குத்தி அம்மனுக்கு பொங்லிட்டுப் படைத்தால் இந்த காலரா உபாதை நீங்கும் என அருள் வாக்கு கூறினார். அதன் பேரில் கிராம மக்கள் அம்மனுக்கு பொங்கலிட்டுப் படைத்த பின்னர் காலரா நீங்கி மக்கள் சுகமாக வாழ்ந்து வருகின்றனர் என ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.