தாமாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி; கட்டாயமல்ல: ராதாகிருஷ்ணன்

மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும், தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமல்ல, தாமாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும் என்று  ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தாமாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி; கட்டாயமல்ல: ராதாகிருஷ்ணன்
தாமாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி; கட்டாயமல்ல: ராதாகிருஷ்ணன்
Updated on
1 min read


சென்னை: மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு முதலில் தடுப்பூசி போடப்படும், தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமல்ல, தாமாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும் என்று தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியிருப்பதாவது, முதல் கட்டமாக புணேவிலிருந்து தமிழகத்துக்கு கரோனா தடுப்பூசி டோஸ்கள் அனுப்பப்பட்டுள்ளன. இன்று காலை 10.30 மணிக்கு  சென்னை விமான நிலையத்தை வந்தடையும் தடுப்பூசி மருந்துகள் 10 நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

தமிழகத்துக்கு முதல்கட்டமாக 5.56 லட்சம் டோஸ் கரோனா தடுப்பூசிகள் இன்று காலை வரவுள்ளன. சீரம் நிறுவனத்திடம் இருந்து 5,36,500 தடுப்பூசிகள் வருகின்றன. பாரத் பயோ டெக் நிறுவனத்திடம் இருந்து 20 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் சென்னை வருகின்றன.

கரோனா தடுப்பூசி மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோருக்கு முதலில் போடப்படும். தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாயமல்ல, தாங்களாக முன்வருபவர்களுக்கே தடுப்பூசி போடப்படும். 30 நாள்கள் இடைவெளியில் இரண்டு முறை போடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com