சசிகலா குணமடைந்து வருகிறார்: மருத்துவமனை அறிக்கை
சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவர் வேகமாக குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.


சசிகலாவின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் அவர் வேகமாக குணமடைந்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள வி.கே. சசிகலாவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் செவ்வாய்க்கிழமை காலை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
கரோனா அறிகுறிகள் இல்லை. சசிகலாவின் நாடித்துடிப்பு, ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட அனைத்தும் கட்டுப்பாட்டில் உள்ளன. சுயநினைவுடன் இருக்கிறார். அவர் உணவை இயல்பாக எடுத்துக்கொள்கிறார். உதவியாளர்களின் உதவியுடன் அவர் எழுந்து நடக்கிறார். வழக்கமாக கரோனாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையே அளிக்கப்படுகிறது. சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...