
அவிநாசி: தைப்பூசத் திருவிழாவையொட்டி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் சுப்பிரமணியர் தேரோட்டம்(மழலையர் தேர்) வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
கொங்கு ஏழு சிவ ஸ்தலங்களில் முதன்மை பெற்ற கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, வியாழக்கிழமை அதிகாலை வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷகேம் நடைபெற்றது.
திருத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணியர்.
இதைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை உடனமர் சுப்பிரமணியர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பிரகார உலா வந்து, தேருக்கு எழுந்தருளினர். முக்கிய நிகழ்வாக மழலையர் தேர் எனப்படும் சுப்பிரமணியர் தேரை இழுக்க கரோனா பொதுமுடக்கத்தால், குழந்தைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, பெரியவர்கள் மட்டும் அரோகரா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்தனர்.
இதேபோல, திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவிலில் தைப்பூசத் திருவிழாவையொட்டி, சண்முகநாதருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேகத்துடன் சாமி தரிசனம் நடைபெற்றும். இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.