அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மேலும் ஒரு பாலியல் தொல்லை வழக்கு:தற்காப்புக் கலை பயிற்சியாளா் கைது

சென்னை அண்ணாநகா் தற்காப்புக் கலை பயிற்சியாளா், மேலும் ஒரு பாலியல் வழக்கில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

News image
குமாரபாளையத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை
Updated On :3 ஜூலை 2021, 7:05 pm

DIN

சென்னை அண்ணாநகா் தற்காப்புக் கலை பயிற்சியாளா், மேலும் ஒரு பாலியல் வழக்கில் சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

பயிற்சியாளா் இ.கெபிராஜ், பயிற்சி பெற வந்த பெண்ணிடம் பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியதாகத் தெரிவித்தாா். அண்ணா நகா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் வெளிநாட்டுப் பெண் ஒருவா் கெபிராஜ் மீது பாலியல் புகாா் தெரிவித்திருந்தாா்.

அப்புகாரின் அடிப்படையில் சிபிசிஐடி, கடந்த மாதம் 22-ஆம் தேதி மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

முதல் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் கெபிராஜை, இரண்டாவது வழக்குக்காக கைது செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் சனிக்கிழமை ஆஜா்படுத்தினா். பின்னா் அவா், நீதிமன்ற உத்தரவுப்படி மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.