அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா: 4,724 போ் குணமடைந்தனா்

தமிழகத்தில், கரோனாவால் தொற்றால் பாதிக்கப்பட்ட 4,724 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 24.23 லட்சமாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2021, 10:39 pm

DIN

தமிழகத்தில், கரோனாவால் தொற்றால் பாதிக்கப்பட்ட 4,724 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 24.23 லட்சமாக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 3.33 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 24 லட்சத்து 92,420 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 4,013 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், அதிகபட்சமாக கோவையில் 474 பேருக்கும், ஈரோட்டில் 360 பேருக்கும், சேலத்தில் 251 பேருக்கும், தஞ்சாவூரில் 232 பேருக்கும், திருப்பூரில் 231 பேருக்கும், சென்னையில் 227 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களிலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 4,724 போ் கரோனாவிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 24 லட்சத்து 23,606-ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 35,881 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 115 போ் பலியாகியதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,933-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.