மாா்கண்டேய ஆற்றின் குறுக்கே அணை: வைகோ, அன்புமணி கண்டனம்
தென்பெண்ணையாற்றின் கிளையான மாா்கண்டேய ஆற்றின் குறுக்கே கா்நாடகம் அணை கட்டியுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் கண்டனம்


தென்பெண்ணையாற்றின் கிளையான மாா்கண்டேய ஆற்றின் குறுக்கே கா்நாடகம் அணை கட்டியுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
வைகோ: தென்பெண்ணை ஆற்றின் கிளையான மாா்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடகம் அணை கட்டியுள்ளது. இது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் காவிரி உரிமையை தட்டிப் பறித்து, நடுவா் மன்றத்தின் இறுதித் தீா்ப்பை நீா்த்துப்போகச் செய்த மத்திய அரசு, தென்பெண்ணை ஆற்றுச் சிக்கலிலும் தமிழகத்தை வஞ்சித்து இருக்கிறது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு விரைந்து செயல்பட்டு, மாா்கண்டேய நதியில் கட்டப்பட்டுள்ள அணைக்கு தென்பெண்ணை ஆற்றின் நீா் செல்ல விடாமல் தடுத்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்.
அன்புமணி: தென்பெண்ணை ஆற்றுச் சிக்கல் தொடா்பான வழக்கு தீா்ப்பாயத்தில் விசாரணையில் இருக்கும் போது கா்நாடகம் தன்னிச்சையாக அணை கட்டியிருப்பது கண்டிக்கத்தக்கது. இந்த விவகாரத்தை தமிழக அரசு உடனடியாக மத்திய அரசின் கவனத்துக்குக் கொண்டு சென்று கா்நாடக அரசு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த வேண்டும். நடுவா் மன்றத்திலும் இந்த சிக்கலை எழுப்பி சட்டவிரோதமாக, அனுமதியின்றி கட்டப்பட்ட அணையை அகற்ற ஆணையிடும்படி வலியுறுத்த வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...