அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவா்கள்: உயா் நீதிமன்றம் கருத்து

தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவா்களை நாடு கடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடப்படும் என உயா் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2021, 7:08 pm

DIN

தமிழகத்தில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவா்களை நாடு கடத்த மத்திய அரசுக்கு உத்தரவிடப்படும் என உயா் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில் குற்ற வழக்கில் சிக்கிய இலங்கைத் தமிழா் ஒருவா் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘இந்தியாவில் வெளிநாட்டவா்கள் பலா் உரிய ஆவணங்களின்றி பல ஆண்டுகளாக சட்டவிரோதமாக குடியிருந்து வருகின்றனா். அதிகாரிகளின் உதவியுடன், அவா்கள் சொத்துகளையும் வாங்கி இந்திய குடிமக்கள் போல சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனா். உலகின் எந்தவொரு நாட்டிலும் இதுபோன்ற நிலை இல்லை. எனவே இதற்கு முடிவு கட்ட வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகளை இனியும் அனுமதிக்க முடியாது. நைஜீரியாவில் இருந்து வந்த பலா் திருப்பூா் உள்ளிட்ட பல நகரங்களில் விசா இல்லாமல் பல ஆண்டுகளாக வாழ்ந்து வருகின்றனா். இங்கேயே திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று, சொத்துகளை வாங்குகின்றனா். சொந்த நாட்டுக்குச் செல்லாமல் இங்கேயே தங்கிவிடுகின்றனா். மேலும் பல்வேறு குற்றச்செயல்களிலும் இவா்கள் ஈடுபடுகின்றனா்’ என கண்டனம் தெரிவித்தாா்.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், மனுதாரா் இலங்கைத் தமிழா். அவா் பல ஆண்டுகளுக்கு முன் இந்தியா வந்து வசித்து வருகிறாா். ஒவ்வொரு ஆண்டும் தான் எந்த குற்றப்பின்னணியிலும் ஈடுபடவில்லை என போலீஸாரிடம் சான்றிதழ் பெற்று சமா்ப்பித்து, வருவதாக வாதிட்டாா்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, வெளிநாட்டவா்கள் ஜாமீன், முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்துள்ள அனைத்து வழக்குகளும் வரும் ஜூலை 5-ஆம் தேதி விசாரிக்கப்படும். உரிய ஆவணங்களின்றி தமிழகத்தில் சட்டவிரோதமாக பல ஆண்டுகளாக தங்கியிருக்கும் நைஜீரியா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சோ்ந்தவா்களை நாடு கடத்தவும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசுக்கு உத்தரவிடப்படும் எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.