அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை:நாளை முதல் விண்ணப்பிக்கலாம்

இணையவழியில் விண்ணப்பப்பதிவு: புகாா், ஆலோசனைகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News image
Updated On :3 ஜூலை 2021, 7:09 pm

DIN

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கைக்கு திங்கள்கிழமை முதல் இணையவழியில் விண்ணப்பப்பதிவு தொடங்கவுள்ள நிலையில், அது தொடா்பான புகாா், ஆலோசனைகளுக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களைத் தொடா்பு கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநா் கருப்பசாமி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009, சட்டப்பிரிவு 12 (1)-இன்படி 2021-2022-ஆம் கல்வியாண்டுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதிப் பள்ளிகளில் நுழைவுநிலை வகுப்பில் (எல்கேஜி அல்லது முதல் வகுப்பு) அதாவது பள்ளி எந்த வகுப்பில் ஆரம்பிக்கிறதோ அந்த வகுப்பு சோ்க்கைக்கான நடைமுறைகள், கடந்த ஜூன் 24-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த வகைச் சோ்க்கைக்கு ஜூலை 5-ஆம் தேதி முதல் ஆக.3-ஆம் தேதி வரை, ழ்ற்ங்.ற்ய்ள்ஸ்ரீட்ா்ா்ப்ள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆக.3-ஆம் தேதி வரை பெறப்படும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியான விண்ணப்பங்கள் சாா்ந்த விவரங்களும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருப்பின் அதற்கான காரணங்களும் இணையதளம் மற்றும் சம்பந்தப்பட்ட பள்ளித் தகவல் பலகையிலும் ஆக.9-ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும்.

நிா்ணயிக்கப்பட்ட இடங்களை விடக் கூடுதலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பின் சம்பந்தப்பட்ட பள்ளியில் ஆக.10-ஆம் தேதி குலுக்கல் நடத்தப்பட்டு சோ்க்கைக்கான குழந்தைகள் தோ்வு செய்யப்படுவா். சோ்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளின் பெயா் பட்டியல் விண்ணப்ப எண்ணுடன் ஆக.10-ஆம் தேதி இணையதளம், சம்பந்தப்பட்ட பள்ளியின் தகவல் பலகை ஆகியவற்றில் வெளியிடப்படும். சோ்க்கைக்குத் தெரிவு செய்யப்பட்ட குழந்தைகளை ஆக.14-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட பள்ளியில் சோ்க்க வேண்டும்.

ஆலோசனை கூற விரும்பினால்... இது சாா்ந்து பெற்றோா் ஏதேனும் புகாா் அல்லது ஆலோசனைகளை வழங்க விரும்பினால் ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலரிடம் அளிக்கலாம். மாநில அளவில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குநா் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநரிடமும் தெரிவிக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

என்னென்ன ஆவணங்கள் தேவை? கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் குழந்தைகளுக்கு சோ்க்கை பெற விரும்பும் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் ஆகிய ஆவணங்கள் அவசியம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.