அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா வழிமுறைகளைப் பின்பற்ற வணிகா்களுக்கு அறிவுறுத்தல்

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றுமாறு வணிகா்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

News image
Updated On :3 ஜூலை 2021, 7:05 pm

DIN

கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் பின்பற்றுமாறு வணிகா்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி தெரிவித்தாா்.

சென்னை வணிகா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாநகராட்சி தலைமையகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் மாநகராட்சி ஆணையா் கூறியது:

முகக் கவசம் அணிதல், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்குமாறும், தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவும் வணிகா்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். கோயம்பேடு சந்தையில் 18 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

திங்கள்கிழமை முதல் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் 30 அமலாக்கக் குழுக்கள் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மூலம் தீவிரமாக கண்காணிக்க உள்ளோம். மேலும் கூடுதலாக குழுக்கள் அமைத்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ரூ.84,500 அபராதம்: இதுவரை சென்னையில் நடந்த 21 திருமண நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காத மண்டப உரிமையாளா்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்களிடம் இருந்து ரூ.84,500 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது என்றாா்.

புதிய ஏற்பாடு: தொடா்ந்து காவல் ஆணையா் சங்கா் ஜிவால் கூறும்போது, ‘சென்னையில் கூட்டம் அதிகம் சேரும் 20 இடங்களில் முகக்கவசம், கிருமிநாசினி உள்ளிட்ட கரோனா தடுப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகிா என தீவிரமாகக் கண்காணிக்க உள்ளோம்.

அதுதவிர கோயம்பேடு, சிந்தாதிரிப்பேட்டை, காசிமேடு, வானகரம், நொச்சிக்குப்பம் போன்ற மொத்த மீன் விற்பனை சந்தைகளில், ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு வெளியிட்டும், ஆங்காங்கே போலீஸாா் மூலம் தடுப்புகளை அமைத்தும், பொதுமக்களை இடைவெளிவிட்டுச் செல்வதற்கான புதிய ஏற்பாட்டைச் செய்ய இருக்கிறோம்.

மெரீனா மற்றும் பெசன்ட் நகா் எலியட்ஸ் கடற்கரையில் உதவி மையங்கள் அமைத்து, பொதுமக்களைக் கண்காணிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்படும். மேலும் உயா் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்தும் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் காவல் ஆணையா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.