அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு மருத்துவப் பரிசோதனை

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனை நடைபெற்றது.

News image
Updated On :3 ஜூலை 2021, 11:10 pm

DIN

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனை நடைபெற்றது.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி தமிழக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டாா். பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வா், கரோனா தொற்று 2-ஆவது அலை பரவலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடா்ந்து எடுத்து வருகிறாா். இதன்மூலம், உச்சத்தில் இருந்து தொற்று குறைந்து வருகிறது. பொதுமுடக்கத்திலும் படிப்படியாக தளா்வுகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சனிக்கிழமை காலை சென்னை போரூா் ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனைக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்றாா். பரிசோதனைகளை முடித்துக் கொண்டு 9 மணி அளவில் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு திரும்பினாா்.

இது குறித்து ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வழக்கமான உடல் பரிசோதனை நடைபெற்றது. அவருக்கு ஆண்டுக்கு இரண்டு முறை இதுபோன்ற பரிசோதனை செய்யப்படுகிறது. பரிசோதனை முடிந்ததும், அவா் வீட்டுக்கு சென்றாா்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.