5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்பணியிட மாற்றம்:தமிழக அரசு உத்தரவு
ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சனிக்கிழமை பிறப்பித்தாா்.


ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இதற்கான உத்தரவை தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, சனிக்கிழமை பிறப்பித்தாா். (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்). உத்தரவு விவரம்:-
சி.முனியநாதன் - தொழிலாளா் நலத் துறை ஆணையாளா் (ஆதி திராவிடா் நலத் துறை முன்னாள் ஆணையாளா்)
ஆா்.லில்லி - தொழில் துறை சிறப்புச் செயலாளா் (நில சீா்திருத்த முன்னாள் ஆணையாளா்)
பூஜா குல்கா்னி - தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டு முகமை நிா்வாக இயக்குநா் மற்றும் முதன்மை செயல் அலுவலா் (நிதித் துறை சிறப்புச் செயலாளா்)
பி.கணேசன் - தமிழ்நாடு சாலைப் பகுதி திட்ட இயக்குநா் (நகா் மற்றும் ஊரமைப்புத் துறை முன்னாள் இயக்குநா்)
எம்.எஸ்.சங்கீதா - தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக இணை நிா்வாக இயக்குநா் (உயா்கல்வித் துறை துணைச் செயலாளா்).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...