தமிழகத்தில் மேலும் 3,715 பேருக்கு கரோனா
தமிழகத்தில் புதிதாக 3,715 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தமிழகத்தில் புதிதாக 3,715 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 3,715 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 25,00,002 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 4,029 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 24,32,017 பேர் குணமடைந்துள்ளனர்.
54 பேர் நோய்த் தொற்றுக்கு பலியானதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 33,059 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி தனிமையில் உள்ளவர்கள் உள்பட மொத்தம் 34,926 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிகபட்சமாக கோவையில் 436 பேருக்கும், ஈரோட்டில் 330 பேருக்கும், சேலத்தில் 233 பேருக்கும், தஞ்சாவூரில் 218 பேருக்கும், திருப்பூரில் 217 பேருக்கும், சென்னையில் 214 பேருக்கும் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...