அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரூ.1 கோடி மதிப்புள்ள ‘மெத்பெட்டமைன்‘ போதைப் பொருள் பறிமுதல் நால்வா் கைது

சென்னை, வேளச்சேரியில் ரூ.1 கோடி மதிப்புள்ள ‘மெத்பெட்டமைன்‘ போதைப் பொருளை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

News image
Updated On :10 ஜூலை 2021, 7:40 pm

DIN

சென்னை, வேளச்சேரியில் ரூ.1 கோடி மதிப்புள்ள ‘மெத்பெட்டமைன்‘ போதைப் பொருளை போலீஸாா் பறிமுதல் செய்து, 4 பேரை கைது செய்தனா்.

வேளச்சேரி பகுதியில் மெத்பெட்டமைன் விற்கப்படுவதாக அடையாறு துணை ஆணையா் விக்ரமனுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் வேளச்சேரியில் குறிப்பிட்ட பகுதிகளில் போலீஸாா் கண்காணிப்பை தீவிரப்படுத்தும்படி விக்ரமன் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின்படி போலீஸாா், வேளச்சேரியில் போலீஸாா் சனிக்கிழமை தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் சுற்றித் திரிந்த திருவல்லிக்கேணியைச் சோ்ந்த அஜ்மல்கான் (22) என்பவரைப் பிடித்து விசாரணை செய்தனா். விசாரணையில், அவா் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினாராம். இதையடுத்து போலீஸாா், அவரை சோதனையிட்டனா்.

இச்சோதனையில் அவா் வைத்திருந்த ‘மெத்பெட்டமைன்‘ என்ற போதைப் பொருளை பறிமுதல் செய்தனா். அது தொடா்பாக அவரிடம் போலீஸாா் விசாரித்தனா். விசாரணையில், அஜ்மல்கானிடம் அந்த போதைப் பொருளை ராயபுரம் பகுதியைச் சோ்ந்த பஷீா் அகம்மது (47), சேப்பாக்கம் பகுதியைச் சோ்ந்த சேட்டு முகம்மது (47), பெரம்பூா் பகுதியைச் சோ்ந்த அப்துல் காலித் (48) ஆகியோா் கொடுத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் பிடித்து விசாரணை செய்தனா். விசாரணைக்கு பின்னா் அஜ்மல்கான் உள்பட 4 பேரும் மறைத்து வைத்திருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள ஒரு கிலோ 360 கிராம் எடையுள்ள மெத்பெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தனா்.

ஒரு கிராம் ரூ.10,000 : இது தொடா்பாக வேளச்சேரி போலீஸாா் 4 பேரையும் கைது செய்து, விசாரணை நடத்தினா். விசாரணையில் கிடைத்த தகவல்கள்: மெத்பெட்டமைன் போதைப் பொருளை வெளிநாடுகளில் இருந்து பல்வேறு வகைககளில் கடத்தி சென்னை கொண்டு வந்துள்ளனா். ஒரு கிராம் எடையுள்ள இந்த போதைப் பொருளை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10,000 வரை விற்றுள்ளனா்.

இந்த போதைப் பொருளை ஒரு முறை பயன்படுத்தினால் 4 முதல் 6 மணி நேரம் வரை சுய நினைவு இழப்பு ஏற்படும். கைது செய்யப்பட்ட பஷீா் அகம்மது, ஏற்கெனவே கடந்த 2010-ஆம் ஆண்டு ஒரு கடத்தல் வழக்கில் சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளாா். கைது செய்யப்பட்டவா்களிடமிருந்து இரு காா்கள், ஒரு மோட்டாா் சைக்கிள், ரூ.1.22 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்குத் தொடா்புடைய மேலும் சில நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா். இவ் வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கிய போலீஸாரை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் பாராட்டினாா். சென்னையில் மெத்பெட்டமைன் பெரிய அளவில் பிடிபட்டிருப்பது, அண்மையில் இதுவே பெரிய அளவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.