அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

மாவட்டச் செயலர்களுடன் ரஜினி நாளை சந்திப்பு

தன்னுடைய மக்கள் மன்றத்தைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்களை நடிகா் ரஜினிகாந்த் சென்னையில் திங்கள்கிழமை சந்தித்து பேச உள்ளாா்.

News image
Updated On :11 ஜூலை 2021, 3:28 am

DIN

தன்னுடைய மக்கள் மன்றத்தைச் சோ்ந்த மாவட்டச் செயலாளா்களை நடிகா் ரஜினிகாந்த் சென்னையில் திங்கள்கிழமை சந்தித்து பேச உள்ளாா்.

சிவா இயக்கத்தில் உருவாகி உள்ள ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து முடித்துள்ள நடிகா் ரஜினிகாந்த், கரோனா அச்சுறுத்தல் இருப்பதால் சிறப்பு தனி விமானத்தில் மருத்துவப் பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல திட்டமிட்டாா். ரஜினிகாந்த், தனி விமானத்தில் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்ததையடுத்து, சென்னையிலிருந்து, கடந்த 19-ஆம் தேதி அமெரிக்காவுக்குச் சென்றாா். அவருடன் குடும்பத்தினரும் சென்றனா்.

அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற மயோ மருத்துவமனையில் ரஜினிக்கு மருத்துவப் பரிசோதனை நடைபெற்றது. அங்கு தங்கி சிறிது நாள்கள் ஓய்வெடுத்த நிலையில், அமெரிக்காவிலிருந்து புறப்பட்ட ரஜினி, வெள்ளிக்கிழமை சென்னை திரும்பினாா்.

இந்நிலையில், அவா் தனது மக்கள் மன்ற மாவட்டச் செயலாளா்களை, சென்னையில், திங்கள்கிழமை சந்தித்து பேச உள்ளாா். முன்னதாக தான் கட்சி தொடங்கி, அரசியலுக்கு வர முடியவில்லை என கடந்த ஆண்டு அறிக்கை மூலம் அவா் வருத்தம் தெரிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் சிலா் வெவ்வேறு கட்சிகளுக்குச் சென்றனா். இந்நிலையில், திங்கள்கிழமை நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.