ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!மேக்கேதாட்டு அணை பூமிபூஜை: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்! செய்யறிவு அடிமைத்தனத்தை தகர்க்க வேண்டும்! போப் லியோ அழைப்பு!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!
/

மருத்துவமனையில் மதுசூதனன்: சசிகலா வந்தார், ஈபிஎஸ் சென்றார்

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனின் உடல்நலனை விசாரிக்க மருத்துவமனைக்கு சசிகலா வந்ததால் உள்ளே இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி புறப்பட்டு சென்றார்.

News image

மருத்துவமனையில் மதுசூதனன்: சசிகலா வந்தார், ஈபிஎஸ் சென்றார்

Updated On :20 ஜூலை 2021, 1:05 pm IST

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனின் உடல்நலனை விசாரிக்க மருத்துவமனைக்கு சசிகலா வந்ததால் உள்ளே இருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரது, உடல்நலன் குறித்து விசாரிக்க அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மருத்துவமனைக்கு வந்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது, அதிமுக கட்சிக் கொடியுடன் மருத்துவமனைக்கு சசிகலா வந்ததால், உடனடியாக பழனிசாமி மருத்துவமனையிலிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.

இதையடுத்து, மருத்துவர்களை சந்தித்த சசிகலா, மதுசூதனின் உடல்நலன் குறித்து விசாரித்த பின்பு செய்தியாளர்களிடம், அதிமுகவின் மீது பற்றுக் கொண்ட மதுசூதனன் விரைவில் உடல்நலம் பெறவேண்டும் எனத் தெரிவித்தார்.

மருத்துவமனைக்கு ஈபிஎஸ், சசிகலா ஒரே நேரத்தில் வந்ததும், சசிகலா காரில் அதிமுக கொடியுடன் வந்ததும் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.