தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளியில் சலவைத் தொழிலாளியின் வீடு எரிந்து நாசம்

ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளியில் மின்கசிவு காரணமாக சலவைத் தொழிலாளியின் வீடு எரிந்து நாசமானது.

News image
ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளியில் சலவைத் தொழிலாளியின் வீடு எரிந்து நாசம்
Updated On :20 ஜூலை 2021, 4:30 am

DIN

ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளியில் மின்கசிவு காரணமாக சலவைத் தொழிலாளியின் வீடு எரிந்து நாசமானது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மிட்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் பூங்கொடி, 32. இவர் மிட்டப்பள்ளியில் சலவைத் தொழில் செய்து வருகிறார். 

இந்நிலையில் நேற்று இரவு 1.30 மணியளவில் பூங்கொடியின் குடிசை வீட்டில் திடீரென கூரை தீப்பற்றி எரியத் தொடங்கியது. தீ மளமளவென பரவியது. 

அருகிலிருந்தவர்கள் ஊத்தங்கரை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இருந்தபோதிலும் கூரை வீட்டில் இருந்த டி.வி.எஸ்.எக்ஸ்.எல் இருசக்கர வாகனம் மற்றும் 50 புடவைகள், 30 சட்டை உள்ளிட்ட ஆடைகள் தீயில் கருகி சேதமானது.

இதுகுறித்து சிங்காரப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.