/

மத்திய அரசின் தனியார் மய கொள்கைகளை எதிர்த்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

மன்னார்குடியில் மத்திய தொழிற் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில், மத்திய அரசின் தனியார் மயமாக்கல் கொள்கைகளை எதிர்த்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
மன்னார்குடியில் தலைமை அஞ்சலகம் அருகே மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர்.
Updated On :23 ஜூலை 2021, 8:22 am

DIN

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மத்திய தொழிற் சங்கங்கள் கூட்டமைப்பின் சார்பில், மத்திய அரசின் தனியார் மயமாக்கல் கொள்கைகளை எதிர்த்து வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோரிக்கைகள்: அத்தியாவசியப் பாதுகாப்பு சேவை அவசர சட்டத்தை திரும்ப பெற வேண்டும். பாதுகாப்புத்துறையை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது. மின்சார திருத்தச் சட்டம், மோட்டார் வாகன சட்டம் ஆகியவற்றை திரும்ப பெற வேண்டும். ரயில்வே, மின்சாரம், சுரங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், காப்பீட்டு நிதி நிறுவனங்களை தனியார் மயம்மாக்கக் கூடாது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்தி அதற்கான விலைகளை ஜி.எஸ்.டி.வரிக்குள் கொண்டு வர வேண்டும்.

இக் கோரிக்கைகளை வலியுறுத்தி மன்னார்குடி மேல ராஜவீதி தலைமை அஞ்சலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பொதுச்செயலர் எஸ்.பாண்டியன், சிஐடியு மாவட்டச் செயலர் டி. முருகையன், ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் என்.புண்ணீஸ்வரன், ஐஎன்டியுசி மாவட்டச் செயலர் எஸ்.பாண்டியன் ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில், அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்தும்.கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

டிஎன்சிஎஸ்சி தொமுச மண்டலத் தலைவர் என்.நீலமேகம்,மாவட்ட துணைச் செயலர் எஸ்.கனகராஜ்,போக்குவரத்து தொழிற்சங்கம் மாவட்டச் செயலர் கே.எஸ்.மகாதேவன், ஏஐடியுசி வி.கலைச்செல்வம், சிஐடியு ஜி.ரகுபதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.