விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

ஊத்தங்கரை சந்தையில் களைகட்டியது மாடுகள் விற்பனை

ஊத்தங்கரையில், சில மாததிற்கு பிறகு கூடிய வாரச்சந்தையில் மாடுகள் விற்பனை களை கட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

News image

ஊத்தங்கரை வாரச்சந்தையில் களை கட்டிய மாடுகள் விற்பனை.

Updated On :23 ஜூலை 2021, 7:01 am

DIN



ஊத்தங்கரையில், சில மாததிற்கு பிறகு கூடிய வாரச்சந்தையில் மாடுகள் விற்பனை களை கட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

கரோனா நோய்த்தொற்று ஏற்படாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங்கரை நடைபெறும் கால்நடை சந்தைகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

கடந்த சில மாதங்களாக கால்நடை சந்தைகள் மூடப்பட்டது. இதனால், வாரச்சந்தைகள் வெறிச்சோடியது. குறிப்பாக வாரந்தோறும் சுமார் 40. முதல் 50 லட்சம் வரை வர்த்தகம் நடைபெறும். ஊத்தங்கரைவெள்ளிக்கிழமை மாட்டுச்சந்தை களையிழந்தது. இந்நிலையில், விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்,  ஊத்தங்கரையில்  வாரச்சந்தை இன்று கூடியது. இதில், ஆயிரக்கணக்கான மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.  

Story image

மாடுகள் விற்பனை களை கட்டியதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஊத்தங்கரை மட்டுமின்றி சுற்றுப்புற பகுதியில் இருந்தும், அண்டை மாவட்டங்களாக திருப்பத்தூர் தர்மபுரி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் கால்நடைகளுடன் வந்து குவிந்தனர். மாடுகளை வாங்குவதற்காக கேரளம் மாநிலம், ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள் திரண்டனர். மாடுகள் விற்பனை களை கட்டியது.  ஒரேநாளில் 50 லட்சத்திற்கு மேல் வர்த்தகம் நடைபெற்றதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.