கோவில்பட்டி: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடம்பூர் செ ராஜு தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்
வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ ராஜு தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


நீட் தோ்வு ரத்து செய்யப்படும், பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும், எரிவாயு உருளைக்கு ரூ.100 மானியம் தரப்படும் உள்பட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோவில்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சட்டப்பேரவைத் தேர்தலின் போது நீட் தேர்வு ரத்து, பெட்ரோல் டீசல் விலை குறைப்பு, குடும்பத் தலைவிக்கு மாதந்தோறும் ரூ.1000 என தேர்தல் வாக்குறுதிகள் அளித்த திமுக தலைமையிலான அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கடம்பூர் சிதம்பராபுரத்தில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு தலைமையில் அவரது வீட்டு முன்பு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி திமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
பின்னர், கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ., செய்தியாளர்களிடம் கூறியதாவது, கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் தமிழகம் அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டது. மின்மிகை மாநிலமாக தமிழ்நாடு விளங்கியது. ஆனால் தற்போதைய ஆட்சியில் மின்தடை அதிகம் ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர்.
தேர்தல் வாக்குறுதியில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று கூறினார்கள். கடைசி நிமிடம் வரை நீட் கிடையாது என்று கூறிவிட்டு, கடைசி நேரத்தில் வேறு வழியில்லாமல் நீட் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் மாணவ, மாணவிகள் மிகவும் அவதிப்பட்டுள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து, பொய்யான தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசிவிட்டனர். தற்போது தேர்தல் வாக்குறுதியில் உள்ள எந்த திட்டங்களையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று கடம்பூர் ராஜு கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...