மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆம்பூர்: திமுக அரசை கண்டித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து ஆம்பூர் நகர அதிமுக சார்பாக புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
ஆம்பூரில் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.
Updated On :28 ஜூலை 2021, 7:36 am

DIN

ஆம்பூர்: தமிழகத்தில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசை கண்டித்து ஆம்பூர் நகர அதிமுக சார்பாக புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக திமுக சார்பாக பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டது. அதில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000  உதவித் தொகை,  நீட் தேர்வு ரத்து என்பது உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன ஆனால் அந்த வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. இதனை கண்டித்து மாநிலம் முழுவதும் அதிமுக சார்பாக மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.   

அந்த முடிவின்படி, ஆம்பூர் நகர அதிமுக சார்பாக ஆம்பூர் நகர அதிமுகவினரின் வீடுகளுக்கு முன்பாக சமூக இடைவெளியுடன் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

நகர அதிமுக அலுவலகம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆம்பூர் நகர அதிமுக செயலாளர் மதியழகன் தலைமை வகித்தார்.  நகர இணைச் செயலாளர் அன்பரசன் முன்னிலை வகித்தார். தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட பொருளாளர் கே. ஆனந்த்பாபு, முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் சீனிவாசன், அமீன் மற்றும் நிர்வாகிகள் தினேஷ், ஆதிகேசவன், வினோத், அனில்குமார், மணிவண்ணன், ராஜேஷ், அப்பு பிரசன்னா பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.