கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

திருப்பூரில் கரோனா தடுப்பூசி செலுத்தக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

திருப்பூரில் முறையாக கரோனா தடுப்பூசி செலுத்தக்கோரி பல்லடம் சாலையில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News image
திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ள வித்யாலயம் பேருந்து நிறுத்தம் முன்பாக புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
Updated On :28 ஜூலை 2021, 12:10 pm

DIN

திருப்பூர்: திருப்பூரில் முறையாக கரோனா தடுப்பூசி செலுத்தக்கோரி பல்லடம் சாலையில் பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பல்லடம் செல்லும் சாலையில் உள்ளது பாரதி நகர், இந்தப் பகுதியில் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாரதி நகர் பகுதியில் கடந்த இரண்டரை மாதமாக 350 நபர்களுக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி செலுத்ப்பட்டதாகத் தெரிகிறது. ஆகவே, பாரதி நகர் பகுதியின் மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பாஜகவினர் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக மனு அளித்திருந்தனர்.

எனினும், இதுதொடர்பாக எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதி பொதுமக்கள் பல்லடம் சாலையில் உள்ள வித்யாலயம் பேருந்து நிறுத்தம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த வீரபாண்டி காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இந்த சம்பவம் காரணமாக பல்லடம் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.