/

திருத்தங்கல்: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில்அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி முன்னாள் அதிமுக அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டம் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற கோரி புதன்கிழமை சிவகாசி மற்றும் திருத்தங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

News image
முன்னாள் அதிமுக அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்.
Updated On :28 ஜூலை 2021, 8:46 am

DIN

திருத்தங்கல்: தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி முன்னாள் அதிமுக அமைச்சர் தலைமையில் ஆர்ப்பாட்டம் தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற கோரி புதன்கிழமை சிவகாசி மற்றும் திருத்தங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருத்தங்களில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி தலைமையில் அவரது வீட்டின் முன்பு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சட்டப்பேரவை தேர்தலின்போது திமுக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உதவித்தொகை, பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு என்பது உள்ளிட்ட வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என ஆர்ப்பாட்டத்தின் வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சாத்தூர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜவர்மன் எதிர்க்கோட்டை சுப்பிரமணி உள்ளிட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர் சிவகாசி மற்றும் திருத்தங்களில் அந்தந்த வார்டு அதிமுகவினர் அவரவர் வீட்டின் முன்பு இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.