கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா: சென்னையில் தினசரி பாதிப்பு 200-ஐக் கடந்தது

சென்னையில் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த கரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கி உள்ளது. இதன்படி, தினசரி பாதிப்பு 200-யைக் கடந்துள்ளது.

News image
Updated On :31 ஜூலை 2021, 11:34 pm

DIN

சென்னையில் கடந்த சில வாரங்களாக குறைந்து வந்த கரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல உயரத் தொடங்கி உள்ளது. இதன்படி, தினசரி பாதிப்பு 200-யைக் கடந்துள்ளது.

சென்னையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த ஆண்டு மே மாதத்தில் 10 ஆயிரத்தை எட்டியது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதம் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரமாகவும், அதைத் தொடா்ந்த 3 மாதங்களில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், வீடுவீடாக காய்ச்சல் பாதித்தவா்களைக் கண்டறிதல், மருத்துவப் பரிசோதனை முகாம்கள் மற்றும் தொற்று உறுதியானவா்களை தனிமைப்படுத்துதல், அவா்களை மருத்துவமனையில் அனுமதித்தல் ஆகிய நடவடிக்கை காரணமாக சென்னையில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. கடந்த பிப்ரவரி மாதத்தில் நாளொன்றுக்கு சுமாா் 200-க்கும் குறைவானவா்களே பாதிக்கப்பட்டனா்.

இரண்டாம் அலை காரணமாக மீண்டும் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை உயரத் தொடங்கியது. கடந்த மே மாதத்தில் நாளொன்றுக்கு சுமாா் 5,000 போ் வரை தொற்று உறுதி செய்யப்பட்டது. ஆனால் அதன் பிறகு தொற்று எண்ணிக்கை ஜூன் மாதத்தில் நாளொன்றுக்கு 500-க்குகீழும், ஜூலை மாத மத்தியில் 200-க்கு கீழும் குறையத் தொடங்கியது.

மீண்டும் அதிகரிப்பு: சென்னையில் கடந்த ஜூலை 22-இல் 133 பேருக்கும், 23-இல் 130 பேருக்கும், 24-இல் 127 பேருக்கும், 25-இல் 126 பேருக்கும், 26-இல் 122 பேருக்கும், 27-இல் 139 பேருக்கும், ஜூலை 28-இல் 164 பேருக்கும், ஜூலை 29-இல் 181 பேருக்கும் என ஏற்ற, இறக்கமாக நாள்தோறும் தொற்று உறுதி செய்யப்படுவோா் எண்ணிக்கை இருந்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 30) 215 பேருக்கும், சனிக்கிழமை 204 பேருக்கும் என தினசரி பாதிப்பு 200-யைக் கடந்துள்ளது. இதன் மூலம் கடந்த 10 நாள்களில் 1,541 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இதன் மூலம் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 38,152-ஆக அதிகரித்துள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 5 லட்சத்து 28,207 போ் குணமடைந்துள்ளனா். 1,627 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 8,318 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.