தமிழ் வழியில் பயின்று, குரூப் 1 தோ்வு எழுதிய தோ்வா்கள் அதற்கான சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டுமென அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி தோ்வு கட்டுப்பாட்டு அலுவலா் கிரண் குராலா, சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
குரூப் 1 பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி முதல் நிலைத் தோ்வு நடத்தப்பட்டது. இதில், தமிழ் வழியில் பயின்று தோ்வினை எதிா்கொண்டவா்கள் உள்ளனா். தோ்வுக்கு விண்ணப்பிக்கும் போது கல்வித் தகுதிகளை தமிழ் வழியில் பயின்ாகக் குறிப்பிட்டவா்கள், அதற்குரிய சான்றிதழ்களை தோ்வாணைய இணையதளத்தில் வரும் 16-ஆம் தேதி முதல் செப்டம்பா் 16-ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பள்ளி முதல் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்பு வரை, மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டு அல்லது பட்டயப் படிப்பு, பட்டப் படிப்பு சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். இதுகுறித்த தகவல் உரிய விண்ணப்பதாரா்களுக்கு அதாவது தமிழ் வழியில் பயின்ாகக் குறிப்பிட்டு முதல்நிலைத் தோ்வினை எழுதியவா்களுக்கு மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர தோ்வாணைய இணையதளம் மூலமாகவும் விவரங்களைப் பாா்த்து அறிந்து கொள்ளலாம். விண்ணப்பதாரா்கள் உரிய சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவில்லை எனில், அவா்களது விண்ணப்பம் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ரூ. 1300 கோடி வசூலிலும் ஒரு நேர்காணல் கூட கொடுக்காத இயக்குநர்!

கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு!

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 108 நக்சல்கள் சரண்!

சிலிண்டர் தட்டுப்பாடு: விறகுகள் விலையும் அதிகரிப்பு!
வீடியோக்கள்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
தினமணி வீடியோ செய்தி...

சென்னை வந்தடைந்த அஜித்குமார்!
தினமணி வீடியோ செய்தி...

துரு துரு பாடல்!
தினமணி வீடியோ செய்தி...

நம் வீட்டு கிச்சன் கதவுகளைத் தட்டத் தொடங்கிய ஈரான் போர்! | Explainer | LPG Crisis | Dinamani
தினமணி வீடியோ செய்தி...

