கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகிறது சென்னை

தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட முழு பொதுமுடக்கம் காரணமாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களும் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வருகின்றன.

News image
கரோனா தொற்றிலிருந்து மீண்டு வருகிறது சென்னை
Updated On :10 ஜூன் 2021, 9:31 am

DIN

சென்னை: தமிழக அரசால் பிறப்பிக்கப்பட்ட முழு பொதுமுடக்கம் காரணமாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களும் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வருகின்றன.

சென்னையில் கடந்த மாதம் நாளொன்றுக்கு சுமாா் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை புதன்கிழமை (ஜூன் 9) 1,500-த்துக்கு கீழ் குறைந்துள்ளது.

சென்னையில் புதன்கிழமை நிலவரப்படி, 1,345 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 20,877-ஆக அதிகரித்துள்ளது. 4 லட்சத்து 98,586 போ் குணமடைந்துள்ளனா். தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் 14,678 போ் மருத்துவமனை மற்றும் கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஒரே நாளில் 53 போ் இறப்பு: சென்னையில் கரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்போா் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. கடந்த சில நாள்களாக நாளொன்றுக்கு சுமாா் 90-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்து வந்த நிலையில், புதன்கிழமை இறப்பு எண்ணிக்கை 53-ஆக குறைந்துள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1500க்கும் கீழ் குறைந்துள்ளது. 

சென்னையில் அண்ணாநகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையாறு ஆகிய மண்டலங்களில் தலா 1300 பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

கடந்த ஜனவரி மாதம் தொற்று எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. மொத்தமாக உள்ள 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 500-க்கும் குறைவானவா்களே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில், உருமாறிய கரோனா பரவல் காரணமாக தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் ஏப்ரல் மாதத்தில் தொடங்கி உயரத் தொடங்கியது.

இந்த எண்ணிக்கை மே மாத மத்தியில் உச்சத்தை எட்டி, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்தைக் கடந்தது. தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மே 10-ஆம் தேதியில் இருந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சென்னையில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. இதன்படி, கடந்த வாரம் நாளொன்றுக்கு சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த எண்ணிக்கை வெகுவாக குறையத் தொடங்கி உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.