உருவானது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: சென்னை, திருவள்ளூரில் மழைக்கு வாய்ப்பு
சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இரண்டு நாள்களுக்கு லேசான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இரண்டு நாள்களுக்கு லேசான மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், வடக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரை ஒட்டி உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசாவைக் கடக்கக் கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்றும் நாளையும் பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையும், மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் ஓரிரு உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் பொதுவாக மேகமூட்டத்துடனும் காணப்படும். சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...