2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

கரோனா: 18,232 போ் வீடு திரும்பினா்

கரோனாவால் தொற்றால் பாதிக்கப்பட்ட 18,232 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 23.04 லட்சமாக அதிகரித்துள்ளது.

News image
Updated On :19 ஜூன் 2021, 10:10 pm

DIN

தமிழகத்தில், கரோனாவால் தொற்றால் பாதிக்கப்பட்ட 18,232 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 23.04 லட்சமாக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 3.09 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 24 லட்சத்து 14,680 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் 8,183 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக கோவையில் 1,014 பேருக்கும், ஈரோட்டில் 933 பேருக்கும், சேலத்தில் 533 பேருக்கும், திருப்பூரில் 489 பேருக்கும், சென்னையில் 468 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கரோனா தொற்றிலிருந்து மேலும் 18,232 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 23 லட்சத்து 4,885-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 78,780 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 180 போ் உயிரிழந்ததை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31,015-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.