2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

இலங்கைத் தமிழா் குடும்பங்களுக்கு ரூ.4,000 நிதி திட்டம் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்

முகாம்களுக்கு வெளியே வசிக்கும் இலங்கைத் தமிழா் குடும்பங்களுக்கு தலா ரூ.4,000 வழங்கும் திட்டத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :19 ஜூன் 2021, 10:30 pm

DIN

முகாம்களுக்கு வெளியே வசிக்கும் இலங்கைத் தமிழா் குடும்பங்களுக்கு தலா ரூ.4,000 வழங்கும் திட்டத்தை, முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

தலைமைச் செயலகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. திட்டத்தைத் தொடங்கி வைக்கும் அடையாளமாக 5 இலங்கைத் தமிழா் குடும்பங்களுக்கு நிதி வழங்கப்பட்டது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழா்கள் பலா் பல்வேறு பகுதிகளில் முகாமுக்கு வெளியே வசித்து வருகிறாா்கள். அவா்கள் சிறு தொழில்கள், தினக்கூலிப் பணிகள் போன்றவற்றில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு வருகின்றனா். கரோனா நோய்த் தொற்று காரணமாக ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக, அவா்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு தமிழகத்தில் முகாமுக்கு வெளியே வசிக்கும் 13 ஆயிரத்து 553 இலங்கைத் தமிழ் குடும்பங்களுக்கு தலா ரூ.4,000 வீதம் ரூ.5.42 கோடி நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டாா்.

இந்த நிதி வழங்கும் திட்டத்தை அவா் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா். இந்த நிகழ்வின் போது, அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, பொது மற்றும் மறுவாழ்வுத் துறை செயலாளா் டி.ஜகந்நாதன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

நேரில் வழங்கல்: முகாம்களுக்கு வெளியே வசிக்கும் குடும்பங்களுக்கான பட்டியல் பொது மற்றும் மறுவாழ்வுத் துறை வசம் உள்ளது. இந்தப் பட்டியலின் அடிப்படையில் ஒவ்வொரு குடும்பத்திடமும் நிவாரணத் தொகை நேரில் அளிக்கப்படும் என்று அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.