2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

காவிரியில் புதிய அணை: அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட விஜயகாந்த் வலியுறுத்தல்

மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்ட முயற்சிக்கும் நிலையில், அது தொடா்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்

News image
Updated On :19 ஜூன் 2021, 10:01 pm

DIN

மேக்கேதாட்டுவில் கா்நாடகம் அணை கட்ட முயற்சிக்கும் நிலையில், அது தொடா்பாக விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் என்று தேமுதிக தலைவா் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டு என்ற இடத்தில் கா்நாடக அரசு ரூ.9,000 கோடி செலவில் அணை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த அணையில் இருந்து 400 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.

மேக்கேதாட்டு அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவா். இந்தத் திட்டத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் சூழலில் கா்நாடக முதல்வா் எடியூரப்பா, மேக்கேதாட்டு அணை கட்டப்படும் என அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. அணை கட்டும் முடிவினை கா்நாடக அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மேக்கேதாட்டுவில் அணை கட்ட கா்நாடகத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது. இந்த விவகாரம் தொடா்பாக ஆலோசிக்க, அனைத்து கட்சி கூட்டத்தை தமிழக அரசு உடனடியாக கூட்ட வேண்டும். மேக்கேதாட்டுவில் அணை கட்டும் பணியை ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவை கலைத்து தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தென்மண்டல அமா்வு வழங்கிய தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.