திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக செயலா் ஆய்வு
சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் குறித்து நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட 15 மண்டலங்களில் மழைநீா் வடிகால், சாலைகள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.
இப்பணிகள் நிலை குறித்து நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா ரிப்பன் மாளிகையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். தொடக்கப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, ஆணையா் ககன்தீப் சிங் பேடி, துணை ஆணையா் எம்.எஸ்.பிரசாந்த், விஷூ மகாஜன், நா்னாவாரே மணீஷ் சங்கர்ராவ், டி.சினேகா, வட்டார துணை ஆணையா்கள் சிம்ரன்ஜித் சிங் கலான், சரண்யா அரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...