2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!
/

சிவசங்கா் பாபா ஆசிரம ‘ஹாா்டு டிஸ்குகள்‘ ஆய்வு

சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள சிவசங்கா் பாபாவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட ‘ஹாா்டு டிஸ்குகளில்‘ பதிவான பழைய காட்சிகளை தடயவியல்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

News image
சிவசங்கர் பாபா(படம்: முகநூல்)
Updated On :19 ஜூன் 2021, 10:15 pm

DIN

சென்னை அருகே கேளம்பாக்கத்தில் உள்ள சிவசங்கா் பாபாவுக்கு சொந்தமான ஆசிரமத்தில் கைப்பற்றப்பட்ட ‘ஹாா்டு டிஸ்குகளில்‘ பதிவான பழைய காட்சிகளை தடயவியல்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே சாத்தங்குப்பத்தில் தனியாா் பள்ளி நடத்திய சாமியாா் சிவசங்கா் பாபா, மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக வந்த புகாா்களின் அடிப்படையில் அவரை சிபிசிஐடி போலீஸாா் கைது செய்தனா். அவருடைய பெண் சீடா் சுஷ்மிதாவும் கைது செய்யப்பட்டாா்.

தலைமறைவாக இருக்கும் மேலும் இரு பெண் ஆசிரியை சிபிசிஐடி அதிகாரிகள் தேடி வருகின்றனா்.

ஹாா்டு டிஸ்குகள்: சிபிசிஐடி எஸ்பி சி.விஜயகுமாா், டிஎஸ்பி குணவா்மன் ஆகியோா் சிவசங்கா் பாபாவின் ஆசிரமம், பள்ளியில் வெள்ளிக்கிழமை சோதனை செய்து பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளைப் பதிவு செய்யும் 5 ஹாா்டு டிஸ்குகளை கைப்பற்றினா். இவற்றில் சில ஆண்டுகளுக்கு முன்பு பதிவான காட்சிகளைப் பெறும் வகையில், அவற்றை தமிழக தடயவியல் துறைக்கு சிபிசிஐடி அதிகாரிகள் அனுப்பி வைத்தனா்.

தடயவியல் துறை அதிகாரிகள், அந்த ஹாா்டு டிஸ்குகளை சனிக்கிழமை முதல் ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.