தமிழக பாஜக மாநில செயற்குழு - பொதுக்குழு கூட்டம் தொடங்கியது
தமிழக பாஜக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கமலாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.


தமிழக பாஜக மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் கமலாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை கமலாலயத்தில் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியுள்ள கூட்டம் காணொளி மூலம் நடைபெற்று வருகிறது.
பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பாஜக பொதுச் செயலாளரும், தமிழக பார்வையாளருமான சி.டி.ரவி, இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.
இன்று மாலை வரை நடைபெறும் இந்தக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்த ஆலோசனை செய்யப்படுகிறது. மேலும், தமிழகத்தின் பல பிரச்னைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டு சில முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...