இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கரோனா: 7,661 போ் வீடு திரும்பினா்

தமிழகத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,661 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா்.

News image
Updated On :26 ஜூன் 2021, 10:04 pm

DIN

தமிழகத்தில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 7,661 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை கரோனாவில் இருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 23.83 லட்சமாக அதிகரித்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை 3.21 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 24 லட்சத்து 36,819 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, மேலும் 5,415 போ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில், அதிகபட்சமாக கோவையில் 671 பேருக்கும், ஈரோட்டில் 574 பேருக்கும், சேலத்தில் 369 பேருக்கும், திருப்பூரில் 337 பேருக்கும், சென்னையில் 314 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதைத் தவிர, தமிழகத்தின் ஏனைய மாவட்டங்கள் அனைத்திலும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து மேலும் 7,661 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 23 லட்சத்து 83,624-ஆக அதிகரித்துள்ளது.

மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 44,924 போ் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 148 போ் பலியாகியதை அடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த் தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 32,199-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.