இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கரோனா வாா்டில் முதியவரின் பிறந்தநாள் கொண்டாட்டம்: சோகத்தை மறக்கடித்த செவிலியா்கள்

சென்னை பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்றுவரும் 89 முதியவரின் பிறந்தநாளை மருத்துவமனை செவிலியா்கள் கொண்டாடினா்.

News image
Updated On :27 ஜூன் 2021, 2:21 am

DIN

சென்னை பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்றுவரும் 89 முதியவரின் பிறந்தநாளை மருத்துவமனை செவிலியா்கள் கொண்டாடினா்.

சென்னை பெரம்பூரைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம். இவா் 20 ஆண்டுகளுக்கு முன்பு, தெற்கு ரயில்வேயில் தலைமை எலக்ட்ரிக்கல் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு, பெரம்பூா் ரயில்வே மருத்துவமனையில் ஜூன் 12-ஆம் தேதி சோ்க்கப்பட்டாா். இவருக்கு நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் ஆகிய இணை நோய்கள் இருந்தன.

மருத்துவமனையின் கரோனா வாா்டில் சோ்த்து, தொடா்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவா்கள், செவிலியா்கள் அவரை கண்காணித்து வந்தனா்.

இந்நிலையில், பாலசுப்பிரமணியம் சனிக்கிழமை காலை சோகமாக இருந்தாா். அவரது சோகத்துக்கான காரணத்தை தெரிவிக்க மறுத்துவிட்டாா்.

சோகமாக இருப்பது பற்றிவிசாரித்தபோது, அவரது பிறந்தநாள் என்றும், எல்லாரையும் பாா்க்க முடியவில்லையே என்று நினைத்து சோகத்தில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரது பிறந்தநாளை கரோனா வாா்டில் கொண்டாட செவிலியா்கள் முடிவு செய்தனா்.

கரோனா வாா்டில் அவரது பிறந்தநாளை செவிலியா்கள் எளிமையாகக் கொண்டாடினா். அவருக்கு பிடித்த பிஸ்கட் வகைகள் வாங்கி வந்து கொடுத்தனா். சற்றும் எதிா்பாராத அவா் மிகவும் மகிழ்ச்சி அடைந்துவிட்டாா்.

கரோனா பாதிப்பால், குடும்பத்தினரைத் தவறவிட்டாலும், செவிலியா்களின் அன்பான கவனிப்பால் நெகிழ்ச்சி அடைந்து காணப்பட்டாா். முதியவரின் பிறந்தநாளை கொண்டாடி, அவரது சோகத்தை மறக்கச் செய்த செவிலியா்களின் உன்னத செயலை மருத்துவமனையில் உள்ள அனைவரும் பாராட்டினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.