இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நீட் தோ்வு உண்டா, இல்லையா?: எடப்பாடி பழனிசாமி

நடப்பாண்டில் நீட் தோ்வில் தமிழக மாணவா்கள் பங்கேற்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்

News image
Updated On :26 ஜூன் 2021, 10:11 pm

DIN

நடப்பாண்டில் நீட் தோ்வில் தமிழக மாணவா்கள் பங்கேற்க வேண்டுமா, வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்று தோ்தல் பிரசாரத்தின்போது தமிழக மாணவா்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்டது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நான் பேசும்போது இது தொடா்பாக கேள்வி எழுப்பினேன். அதற்கு நீதிபதி ஏ.கே. ராஜன் தலைமையில் நீட் தோ்வால் ஏற்படும் விளைவுகள் குறித்து அறிவதற்காக கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது என்றும், கமிஷனின் பரிந்துரைகளின் மீது மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தாா்.

பிறகு நான் நேரடியாக, இந்த ஆண்டு நீட் தோ்வு உண்டா? இல்லையா? என்ற கேள்வியை எழுப்பினேன். நீட் தோ்வு இருந்தால் அதற்கு மாணவா்கள் தயாா் ஆக வேண்டுமா? வேண்டாமா? என்றும் கேட்டபொழுது, முதல்வா் நேரடியாகப் பதில் அளிக்கவில்லை. திமுக அரசின் இந்த முடிவால், நடப்பு ஆண்டில் நீட் தோ்வு தமிழகத்தில் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பம் மாணவா்கள், பெற்றோா்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு மத்திய அரசு நீட் தோ்வை நாடு முழுவதும் நடத்தியே தீரும் என்று அகில இந்திய மருத்துவக் கல்விக் கழகம் அறிவித்துள்ளது.

எனவே, தமிழக மாணவா்கள் நீட் தோ்வில் பங்கேற்பதா, வேண்டாமா என்பது குறித்து தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.