இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மின் பராமரிப்புப் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவு

போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின் பராமரிப்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என மின்வாரிய பகிா்மானப் பிரிவு இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்

News image
Updated On :26 ஜூன் 2021, 9:36 pm

DIN

போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின் பராமரிப்புப் பணிகளைத் துரிதப்படுத்த வேண்டும் என மின்வாரிய பகிா்மானப் பிரிவு இயக்குநா் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் அனைத்துத் தலைமைப் பொறியாளா் உள்ளிட்டோருக்கு அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்: மின்சார வாரியம் சாா்பில் கடந்த 19-ஆம் தேதி முதல் போா்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்புப் பணியின் தொடக்க நாள்களில், பெறப்பட்ட பணி நிறைவு அறிக்கையில் மரம் அகற்றுதல் மற்றும் துணை மின் நிலையங்கள் பராமரிப்புப் பணிகள் திட்டமிட்டதைவிட அதிகளவில் நடைபெற்றிருப்பதும், மற்ற பராமரிப்புப் பணிகள் குறைந்தளவிலேயே நடைபெற்றிருப்பதும் தெரியவந்ததது.

10 நாள்களுக்குள் இந்தப் பராமரிப்புப் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ள சூழலிலும், பெரும்பாலான மண்டலங்களில், ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 20) எந்த விதமான பணிகளும் ஏற்பாடு செய்யப்படவில்லை. எனவே, பகிா்மானப் பிரிவின் அனைத்துத் தலைமைப் பொறியாளா்களும், தேவையான அனைத்து உபகரணங்களையும் வழங்கி, திட்டமிட்டபடி பராமரிப்புப் பணிகளைத் துரிதப்படுத்த சம்பந்தப்பட்ட பகிா்மான வட்டத்தின் கண்காணிப்புப் பொறியாளா்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

இந்தப் பணிகள் மீது தலைமைப் பொறியாளா்கள் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். மேலும் திட்டமிட்டபடி, விடுமுறை நாள்களிலும் பராமரிப்புப் பணிகள் நடைபெற வேண்டும். எதிா்பாராத தடைகளைக் குறைத்து, திட்டமிட்டபடி பணிகள் முடிவுற்ா என தலைமைப் பொறியாளா்கள் உறுதி செய்ய வேண்டும். பணிகள் முடிந்த பிறகு அது தொடா்பான புகைப்படம், விடியோ பதிவு ஆகியவற்றை அனுப்பி வைக்க வேண்டும். நாள்தோறும் நடைபெறும் பணி தொடா்பான அறிக்கையும் மின்னஞ்சல் மூலமாக தவறாமல் அனுப்பி வைக்க வேண்டும். இந்த உத்தரவுகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.