கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

சென்னை மக்களே எச்சரிக்கை: கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது

சென்னையில் கடந்த மே மாதத்தில் கரோனா பாதிப்பு கடும் உச்சத்தை அடைந்து, ஜூன் மாதத்தில் அது மெல்ல குறையத் தொடங்கியது. 

News image
சென்னை மக்களே எச்சரிக்கை: கரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கிறது
Updated On :26 ஜூன் 2021, 10:33 am

DIN


சென்னை: சென்னையில் கடந்த மே மாதத்தில் கரோனா பாதிப்பு கடும் உச்சத்தை அடைந்து, ஜூன் மாதத்தில் அது மெல்ல குறையத் தொடங்கியது. 

கரோனா உச்சத்தில் இருக்கும் போது பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டதும், பாதிப்பு குறைந்து விடுகிறது. அதே வேளையில், பாதிப்பு குறைய குறைய தளர்வுகளும் அறிவிக்கப்படுகிறது.

தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் மக்கள் வெளியிடங்களுக்கு சுதந்திரமாகச் சென்று வருகிறார்கள். பொதுமுடக்கம் அறிவிக்கப்படும் போது கரோனா தொற்று முற்றிலும் அழிந்து போய்விடுவதில்லை. அது பரவுவதற்கான வாய்ப்பு தான் குறைந்து போகிறது. தளர்வுகள் அறிவிக்கப்பட்டதும் மக்கள் வெளியே வரத் தொடங்கியதும் கரோனா பரவலும் அதிகரித்துவிடும். எனவே சென்னை மக்களே நிச்சயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது தான்.

26-ஆம் தேதியான இன்று கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 3,611 ஆக உயர்ந்துள்ளது. நேற்று இது 3,530 ஆகவும், அதற்கு முந்தைய நாள் அதாவது வியாழக்கிழமை இது 3,447 ஆகவும் இருந்துள்ளது.

எனவே படிப்படியாக இந்த வாரத்திலேயே நாள்தோறும் நூறு என்ற அளவில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை மெல்ல அதிகரித்து வருகிறது.

எனவே, கரோனா உச்சத்தில் இருந்த போது எந்த அளவுக்குக் கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கப்பட்டதோ அதையே தொடர வேண்டும் என்பதை நிச்சயம் உணரும் நேரம் இது. 

சென்னையில், கடந்த ஜனவரி மாதம் தொற்று எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்பட்டது. மொத்தமாக உள்ள 15 மண்டலங்களில் நாளொன்றுக்கு சுமாா் 500-க்கும் குறைவானவா்களே தொற்றால் பாதிக்கப்பட்டு வந்தனா். இந்நிலையில், உருமாறிய கரோனா பரவல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் உயரத் தொடங்கியது.

இந்த எண்ணிக்கை மே மாத மத்தியில் உச்சத்தை எட்டி, கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமாா் 6 ஆயிரத்தைக் கடந்தது. தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மாதம் 10-ஆம் தேதியில் இருந்து அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் சென்னையில் தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் குறையத் தொடங்கியது. தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், கரோனா நோயாளிகள் எண்ணிக்கையும் மெல்ல அதிகரித்து வருகிறது. 

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.