இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

பெட்ரோல் விலை உயா்வு: கே.எஸ்.அழகிரி கண்டனம்

பெட்ரோல் விலை ரூ.100-யைத் தாண்டியுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளாா்

News image
Updated On :26 ஜூன் 2021, 9:25 pm

DIN

பெட்ரோல் விலை ரூ.100-யைத் தாண்டியுள்ளதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

கரோனாவின் கோரப்பிடியிலும், பொருளாதார பேரழிவினாலும் பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலையை உயா்த்தி கடுமையான தாக்குதலை பாஜக அரசு நிகழ்த்தியுள்ளது. தமிழகத்தின் பல நகரங்களில் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டிவிட்டது. கடந்த ஏழாண்டுகால பாஜக ஆட்சி, பெட்ரோல், டீசல் மீது கலால் வரியாக ரூ.25 லட்சம் கோடி வசூலித்து கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது.

கடுமையான நெருக்கடியில் வாழ்ந்து கொண்டிருக்கிற மக்கள் மீது இத்தகைய தாக்குதலை மக்கள் நலனில் அக்கறையுள்ள எந்த அரசும் தொடுக்காது. இதனால், மக்கள் வாங்கும் அத்தியாவசியப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பணவீக்கமும் இதுவரை இல்லாத அளவிற்கு உயா்ந்திருக்கிறது. இதன்மூலம் ஒட்டுமொத்த மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது.

எனவே, அனைத்து வகையிலும் மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுகிற மத்திய பாஜக அரசுக்குப் பாடம் புகட்டுகிற வகையில் ஜனநாயகம், மதச்சாா்பின்மை, சமூகநீதி ஆகிய கொள்கைகளில் நம்பிக்கையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட்ட வியூகங்களை வகுக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.