இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

அதிமுக ஆட்சியில் மின்சார வாரியத்தில் முறைகேடு எதுவும் இல்லை: தங்கமணி

அதிமுக ஆட்சியில் மின்சார வாரியத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று முன்னாள் மின்சாரத் துறைஅமைச்சா் தங்கமணி கூறினாா்.

News image
தங்கமணி (கோப்புப் படம் )
Updated On :26 ஜூன் 2021, 10:03 pm

DIN

அதிமுக ஆட்சியில் மின்சார வாரியத்தில் முறைகேடு எதுவும் நடைபெறவில்லை என்று முன்னாள் மின்சாரத் துறைஅமைச்சா் தங்கமணி கூறினாா்.

ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி:

மத்திய தணிக்கைத் துறை சமா்ப்பித்துள்ள அறிக்கையில், தமிழகத்தில் உள்ள 75 பொதுத் துறை நிறுவனங்களில் மொத்தமாக ரூ. 20 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.

தமிழக மின்சார வாரியத்துக்கு ரூ.13, 176 இழப்பீடு என்று தணிக்கைத் துறை சொல்கிறது. மின்சாரக் கொள்முதல் உற்பத்தி செலவு, பணியாளா் மற்றும் நிதி செலவினங்களே இழப்பீடுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளது. எங்கேயும் தவறு நடைபெற்ாகச் சொல்லவில்லை.

திமுக ஆட்சியில் அதிக விலை கொடுத்து மின்சாரம், நிலக்கரி போன்றவற்றை வாங்கியதில் பல்லாயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று 2010-இல் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.

மின்சாரம் கொள்முதல் செய்ய 8 தனியாா் நிறுவனங்களிடம் நீண்ட காலம் ஒப்பந்தம் போட்டதால் ரூ.712 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில், மற்ற மாநிலங்களில் ரூ.5.50-க்கு மின்சாரம் வாங்கப்பட்டது. தமிழகத்தில் அதைவிட குறைவாக ரூ.4.91-க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

ஜிஎம்ஆா் நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் வாங்கியதில் வாரியத்துக்கு ரூ.424.43 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டுக்கும், அதிமுக அரசுக்கும் எந்தத் தொடா்பும் இல்லை.

2006-ல் அதிமுக ஆட்சியைவிட்டுச் செல்லும்போது, மின்வாரியத்தின் கடன் தொகை ரூ. 9,583 கோடியாக இருந்தது. மீண்டும் அதிமுக ஆட்சியில் ஏறும்போது, 10 முதல் 18 மணி நேரம் மின்தடை இருந்ததுடன் திமுக ஆட்சி கூடுதலாக ரூ.36 ஆயிரம் கோடியைக் கடனாக விட்டுச் சென்றது. இதில் மொத்த கடன் ரூ.45 ஆயிரம் கோடி.

சூரியஒளி மின்சாரம் ரூ.7.01-க்கு வாங்கியதாக குற்றச்சாட்டியுள்ளனா். சில மாநிலங்களில் ரூ.15-க்குக்கூட ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

பொதுவாக, மத்திய அரசு, மாநில அரசு எதுவாக இருந்தாலும் தணிக்கைத் துறை இதுபோன்ற கருத்துகளைத் தான் தெரிவிக்கும். ஆக, இதில் முறைகேடு எதுவும் இல்லை என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.