ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

தமிழகத்தில் இன்று மேலும் 5,127 பேருக்கு கரோனா; 91 போ் பலி

தமிழகத்தில் இன்று மேலும் 5,127 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

News image
Updated On :27 ஜூன் 2021, 1:13 pm

DIN

தமிழகத்தில் இன்று மேலும் 5,127 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,127 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24,65,874 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கோவையில் 649 பேருக்கும், ஈரோட்டில் 530 பேருக்கும், சேலத்தில் 343 பேருக்கும், திருப்பூரில் 316 பேருக்கும், சென்னையில் 308 பேருக்கும், நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனிடையே, கரோனா தொற்றிலிருந்து இன்று மேலும் 7,159 போ் விடுபட்டு வீடு திரும்பியுள்ளனா். இதனால் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 23,90,783-ஆக அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் தற்போது மருத்துவக் கண்காணிப்பில் 42,801 போ் உள்ளதாக சுகாதாரத் துறைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோனா பாதிப்புக்குள்ளாகி இன்று மேலும் 91 போ் பலியாகினர். 

இதையடுத்து மாநிலம் முழுவதும் இதுவரை நோய்த்தொற்றால் பலியானோரின் எண்ணிக்கை 32,290-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 1,66,203 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.