கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பந்து திமுக கையில்தான் உள்ளது: கே.எஸ். அழகிரி

திமுக - காங்கிரஸ் கூட்டணியில், தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும், ஏனென்றால் பந்து அவர்கள் கையில் தான் உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளா

News image
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி (கோப்புப்படம்)
Updated On :3 மார்ச் 2021, 6:36 am

DIN


சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியில், தொகுதிப் பங்கீடு குறித்து திமுக தான் முடிவு செய்ய வேண்டும், ஏனென்றால் பந்து அவர்கள் கையில் தான் உள்ளது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடர்ந்து இழுபறி நிலவி வருகிறது.

இந்த நிலையில், கடலூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கே.எஸ். அழகிரி, வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்று தெரிவித்தார்.

மேலும், தொகுதிப் பங்கீடு தொடர்பாக திமுக தான் முடிவு செய்ய வேண்டும். ஏனென்றால் பந்து அவர்கள் கையில்தான் உள்ளது. 

காங்கிரஸ் கட்சிக்கென்று ஒரு பலம் இருக்கிறது. அதன் பலம் என்ன என்பது ராகுல் தமிழகம் வரும் போது தெரிகிறது. ஏன் என்றால் பத்து பைசா கூட செலவில்லாமல் கூட்டம் கூடுகிறது என்றால் அது ராகுல் பிரசாரத்தின் போதுதான். ஏனென்றால், செலவு செய்து கூட்டத்தைக் கூட்டுவதற்கு எங்களிடம் பணமில்லை. ராகுல் தமிழகம் வரும் போது, பத்து பைசா செலவில்லாமல் மக்கள் கூட்டம் கூடிவிடுகிறது.

ஏனென்றால் காங்கிரஸ் கட்சியால் வளர்ச்சியைக் கொண்டு வர முடியும் என்று மக்கள் கருதுகிறார்கள் என்று கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.